வணக்கம்! மதிப்புமிகு.மாநிலத் திட்ட இயக்குநர்,ஒபக அவர்களின் கடிதம் நாள்.15.02.2021-ன் படி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே QR கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.அவ்வாறு அடையாள அட்டை வழங்கப்பட்டதில் விடுபட்ட,புதியதாக நியமனம் செய்யப்பட்ட,பணி மாறுதல் பெற்ற,திருத்தம் கோரும் ஆசிரியர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவேஇத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் அடையாள அட்டை தேவைப்படும் ஆசிரியர் விவரங்களை வட்டார கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு பெற்று வெள்ளிக்கிழமை (12.03.2021)-க்குள் மாவட்ட திட்ட
அலுவலகத்தில் ஒப்படைக்க மேற்காண் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
இங்ஙனம்
உதவித் திட்ட அலுவலர்
தருமபுரி.