நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை கிடையாது – இந்த வாரம் தேதி வெளியாகும்!!

நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை கிடையாது – இந்த வாரம் தேதி வெளியாகும்!!

நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை கிடையாது – இந்த வாரம் தேதி வெளியாகும்!!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படாது என தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நடப்பு ஆண்டுக்கான தேர்வு தேதி இந்த வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

நீட் தேர்வு:

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும். இதனால் மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறி ஜேஇஇ தேர்வுகளை போன்று கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் ஜேஇஇ தேர்வுகள் ஆண்டுக்கு நான்கு முறை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீட் தேர்வினை ஆண்டுக்கு இருமுறை நடத்த பரிசீலிக்கப்பட்டது.

அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவு

இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்த தேசிய சோதனை நிறுவனம் முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி வழக்கமான முறையிலேயே நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி இந்த வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மின்சார வாரிய கேங்மேன் பணியிடங்கள் – 8500 பேர் நியமனம்!!கடந்த ஆண்டு, கொரோனா தொற்றுநோயால் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 7,71,500 பேர் தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். ஆங்கிலம், உருது, இந்தி, அசாமி, பெங்காலி, ஒடியா, மராத்தி, கன்னடம், குஜராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய பதினொரு மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.