ஜாக்டோ-ஜியோ பற்றிய சங்கிகளின் தேர்தல்கால முரட்டு உருட்டும். . . .! பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையும்!

ஜாக்டோ-ஜியோ பற்றிய சங்கிகளின் தேர்தல்கால முரட்டு உருட்டும். . . .!  பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையும்!

2018 இறுதியில் ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பு வெளிவந்தபோது அப்போதைய பா.ச்ச.க தேசியச் செயலாளர் எச்சு.ராஜா ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை 'இவாஞ்சலிஸ் & அர்பன் நக்சல்கள்' நடத்துகின்றனர் என்று தமது வழக்கமான வெறுப்பை உமிழ்ந்திருந்தார்.

பா.ச்ச.க இளைஞரணி தலைவர் வினோஜ்.பி.செல்வம் இன்னும் ஒருபடி மேலே சென்று, ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நாங்க வேலைக்கு வருகிறோம் என்று அறிக்கைவிட்டார்.

சரி. அப்புடி எதுக்குத்தேன் ஜாக்டோ-ஜியோ போராடுச்சு. . .?

இவிங்க எப்பவுமே காசுக்குத்தேன் போராடுவாய்ங்க என்போர் தொடர்ந்து பதிவை கண்டிப்பா முழுமையாகப் படிங்க.

ஜாக்டோ-ஜியோ-வின் 9 கோரிக்கைகளுள். . .

ஒரு கோரிக்கை 21 மாதங்கள் வழங்காது நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் சார்ந்தது.

இரு கோரிக்கைகள் முன்னர் வழங்கி வந்த ஊதியத்தை 9 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பறித்த நிலையில் அதை மீண்டும் வழங்கக் கோருவது.

ஒரு கோரிக்கை 15 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்கக் கோருவது.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும் :


இரு கோரிக்கைகள் சில பணியிடங்களை பல ஆண்டுகளாகவும் & வேறு சில பணியிடங்களை 15 ஆண்டுகளாகவும் தொகுப்பூதியத்தில் வைத்திருப்தை மாற்றி பணி நிரந்தரம் கோருவது.

மேற்கண்ட 6-ல் முதலில் குறிப்பிட்டுள்ள 21 மாத நிலுவை ஊதியம் மட்டுமே தற்போது பணியிலுள்ளோருக்கு மட்டுமான கோரிக்கை.

ஏனைய 5 கோரிக்கைகளும் தற்போது பணியில் உள்ளோர் மட்டுமல்லாது இனி அரசுப் பணிக்கு வரவுள்ள தற்போதைய ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுப் பொதுமக்களுக்குமான கோரிக்கைகள்.

சரி. இந்த 5 கோரிக்கைகளின் பலனும் உங்களுக்கும் வேணும்னா பொதுமக்களான நீங்க அரசுப்பணிக்கு முதலில் வரவேண்டுமே அதுதான் 9-ல் மீதியிருக்கும் 3 கோரிக்கைகள்.

PG TRB ALL SUBJECT STUDY MATERIALS CLICK HERE


தற்போது அஇஅதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைவருக்கும் அரசுப்பணி என வாக்குறுதி தந்துள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அஇஅதிமுக 19.02.2018-ல் வெளியிட்ட அரசாணை 56-ன் படி இருக்கும் அரசுப் பணியிடங்களை குறைப்பதோடு புதிய பணியிடங்களை நேரடியாக Employment Exchange மூலம் நிரப்பாமல் Out Sourcing எனும் தனியார் முகமைகள் மூலம் நிரப்ப முடிவு செய்தது.

மேலும், பள்ளிக் கல்வித்துறை அரசாணைகள் 100 & 101-ன் படி 5000 அரசுப் பள்ளிகளை மூடுவது, 3500 ஆரம்பப் பள்ளிகளை உயர்/மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பது, 3500 சத்துணவு மையங்களை மூடுவது, என்ற முடிவினை அறிவித்திருந்தது.

இதனோடே, அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட LKG UKG வகுப்புகளுக்கு முறையாக மழலையர் வகுப்புப் பயிற்சி முடித்துக் காத்திருக்கும் பட்டதாரிகளை நிரப்பாமல் பணியிலுள்ள ஆசிரியர்களையே நியமித்தது அரசு.

மேற்கண்ட இம்மூன்று அறிவிப்புகளால் புதிதாக யாருக்கும் அரசு வேலை கிடைப்பது என்பதே கேள்விக்குறியானது.

இவ்வாறாக, ஜாக்டோ-ஜியோவின் 9 கோரிக்கைகளுள் மூன்று பொதுமக்களாகிய உங்களை அரசுப் பணிக்கு அமர்த்த வேண்டியும், ஐந்து பணியேற்கவுள்ள உங்களுக்குமான ஊதிய & பணி நிரந்தரக் கோரிக்கைகள் சார்ந்ததே!

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் வீதியிலிறங்கிப் போராடிய இந்தப் போராட்டத்தைத்தான் நக்சல்கள் போராட்டம் என்றும் காசே இல்லாம நாங்க வேலைக்கு வர்றோம் என்றும் பார-தீய ஜனதா கட்சி விமர்சித்திருந்தது.

பார-தீய ஜனதா கட்சியின் இத்தீய அனுகுமுறையாலும், கூட்டணிக் கட்சியான அஇஅதிமுக இக்கோரிக்கைகளை இன்றுவரை தீர்க்க முன்வராததாலும் பாதிப்பைச் சந்தித்துள்ளது பணியிலுள்ளோர் மட்டுமல்ல பொதுமக்களும் தான்.

சரி. இப்ப சங்கிகளின் புது உருட்டிற்கு வருவோம்.

புதிய கல்விக் கொள்கையின் பாதிப்புகள் குறித்தும், பள்ளிக் கல்வி தொடர்பான பிரச்சினைகள் சார்ந்தும் செய்தி ஊடகங்களின் அழைப்பின் பேரில் விவாதங்களில் கலந்துகொண்டு ஆசிரியர் என்ற முறையில் தனது பார்வையை வெளியிட்டிருந்தார் திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளித் தலைமையாசிரியை திருமதி.மதனா.

இவரது குடும்பம் அடிப்படையில் திமுக என்பதாலும் தனக்கும் கட்சிப்பணியாற்ற விருப்பமுள்ளதாலும் முறையாக ஆசிரியப் பணியில் விருப்ப ஓய்விற்கு (VRS) விண்ணப்பித்துவிட்டு நடப்பு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தார்.

ஆனால், திமுக இவருக்கு சீட் தரவில்லை.

நிற்க.

உண்மை இவ்வாறு இருக்க, ஒரு சங்கி இவரது படத்தைப் போட்டு 'இவரை ஜாக்டோ-ஜியோ மாநிலத்தலைவி' என்றும் தாங்கள் சொல்லி 'அரசுக்கெதிராக போராடியதால் திமுக இவருக்கு MLA சீட்' தந்ததாகவும். . . 'இப்பத்தெரியுதா ஆசிரியர்கள் ஸ்ட்ரைக் எப்படி நடந்தது' என்றும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஏனைய பிற சங்கிகளும், சங்கிகளின் வழக்கமான சூழ்ச்சிகளுக்கு இரையாகும் அப்பாவி மக்களும் இதனை உண்மையென நம்பி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஜாக்டோ-ஜியோ மாநிலப் பொறுப்பாளர்களுள் தலைவர் என்ற பொறுப்பே கிடையாது என்பதோடே மாநில அளவில் பொறுப்பில் உள்ளோரில் பெண் நிர்வாகியே கிடையாது.

தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற & திமுக-வை எதிர்க்க சங்கிகள் எந்தளவிற்கு இறங்கி பொய்யான செய்திகளை வெளியிடுவர் என்பது தமிழகமே அறிந்த ஒன்றுதான். இவ்விடயத்தையும் எதிர்கொள்வது என்பது திமுக & ஆசிரியை திருமதி மதனா ஆகியோரது தனிப்பட்ட நிலைப்பாடு தான். இதைச் சங்கிகளின் காமெடியாகத்தான் நக்கலடித்து கடந்துள்ளார் திருமதி மதனா.

ஆனால், இதில் ஜாக்டோ-ஜியோவைக் கோர்த்து விட்டதோடே ஒட்டுமொத்த தமிழ்நாட்டு நலனிற்கான பொதுமக்களின் அரசுப் பணிக் கனவை நனவாக்கக் களத்தில் இறங்கிப் போராடிய எமது போராட்டத்தையும் இழிவுபடுத்தியுள்ள சங்கிகளின் போலிப் பரப்புரை என்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்பதோடே பொதுமக்களும் ஜாக்டோ-ஜியோயின் உண்மையான போராட்ட நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்நெடிய பதிவு.

இது தேர்தல் காலம் என்தால் சங்கிகள் இன்னும் பல முரட்டுத்தனமான வதந்திகளைப் பரப்புவர்.

தமிழகமே கவனமாக இரு!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
(திருக்குறள் 423)

படங்கள் இணைப்பு :

1. சங்கியின் வதந்தி
2. ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் விபரம்