ஓட்டுக்கு பணம் - அரசுப்பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

m42
 

தர்மபுரி மாவட்டத்தில், ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள மாம்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் குமார், அ.தி.மு.க., பிரமுகருக்கு ஆதரவாக, பணப் பட்டுவாடா பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது வீட்டில், 16 லட்சம் ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து, அவரை சஸ்பெண்ட் செய்து, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.