தபால் நிலையங்களில் நீண்ட நாள் சேமிப்புத் திட்ட முதலீடுகள், முதலீட்டாளர்களிடம் எவ்வித பயத்தையும் ஏற்படுத்தாமல், வியக்க வைக்கும் பலன்களை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், மாதத்திற்கு 100 ரூபாய் முதலீடு செய்தாலே, நல்ல வருவாயை பெறலாம்.
தபால் நிலையங்களில் நடைமுறையிலுள்ள இந்த திட்டத்தை, தனிநபர் மற்றும் மூன்று நபர்களை உள்ளடக்கிய கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் இணைந்து பயன் பெறலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயரில், அவர்களது பாதுகாவலர்கள் தபால் வங்கி கணக்கை தொடர்ந்து இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இந்த நிரந்தர வைப்புத் திட்டத்தின் முதிர்ச்சிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். 100 ரூபாய் தொடங்கி, எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடாக ஒவ்வொரு மாதமும் செலுத்தலாம்.
இத்திட்டத்தில், நீங்கள் மாதம் 10,000 ரூபாயை பத்தாண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் எனில், முதிர்வு காலத்தின் இறுதியில் வட்டி வருவாயுடன் 16.28 லட்சம் ரூபாயை, திட்ட முதிர்வு தொகையாக பெறுவீர்கள். இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட பின், நிரந்தர வைப்பு நிதியை குறிப்பிட்ட தவணைக் காலத்தில் செலுத்தவில்லை எனில், அபராதம் விதிக்கப்படும்.
இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய, 5 ஆண்டுகளுக்கான நிரந்தர வைப்பு நிதிக்கான தபால் வங்கிக் கணக்கை தொடங்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும், முதலீடுகளுக்கான வட்டி வருவாய் கணக்கிடப்படும். இத்திட்டத்திற்கான வட்டியாக 5.8 சதவீதத்தை தபால் வங்கி வழங்குகிறது.