அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் ‘வானவில் மன்றம்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

 


தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், ரூ.25 கோடி மதிப்பிலான ‘வானவில் மன்றம்’ திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி பங்கீட்டின்கீழ் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்புவரை படிக்கும் மாணவ-மாணவிகளின் கல்விக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டு வருகின்றன. Read More Click Here