அரசு ஊழியர்கள் பொதுமக்களிடம் பேசும் போது ‘ஹலோ’வுக்கு பதில் ‘வந்தே மாதரம்’; அரசு திடீர் உத்தரவு

 

அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் பேசும்போது  ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘மகாராஷ்டிரா அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், ெபாதுமக்களிடமிருந்து தொலைபேசி அல்லது செல்போன் அழைப்புகள் வந்தால், இனிமேல் ‘ஹலோ’ என்று செல்வதற்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும். Read More Click Here