ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் RTI தகவல் :

 *RTI மூலம் பெறப்பட்ட தகவல்*

 இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் ஊதிய நிலை 10 - ல் ரூ. 20600 - 75900 என அரசாணை ( நிலை) எண். 90, நிதித் ( ஊ.பி.) துறை, நாள்: 26.02.2021 - ல் திருத்தி அமைத்து ஆணையிடப்பட்டதனால் ஊதிய நிலை ( Level ) 10 ல் தளம் ( Cell) 40 - ஐ (ரூ.65500/-) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மேற்கூறிய அரசாணையின்படி *வருடாந்திர* ஊதிய உயர்வினை தொடர்ந்து அனுமதித்திடலாம் என்ற தகவல் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

     Pay matrix அட்டவணையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு வழங்குவதில் சில பல இடங்களில் எழுந்த சிக்கல்களுக்கு இத்தகவல் உதவும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.