வங்கக்கடலில் உருவாகப்போகும் புயல்.. எப்போது? வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்.. தெரிஞ்சுக்கோங்க!

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் நாளை கத்தரி வெயில் காலம் துவங்குகிறது.

இதனால் மக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்க வாய்ப்புள்ளது என்ற நிலையில் தான் வங்கக்கடலில் மே 8 ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. பல மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸை கடந்து வெயில் மக்களை வாட்டியது. இதற்கிடையே தான் கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

Read More Click Here