அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வங்கிகளில் SGSP (State Government Salary Package) கணக்கு தொடங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அரசு இணைச் செயலாளரின் கடிதம்!!!

 


அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வங்கிகளில் SGSP (State Government Salary Package) கணக்கு தொடங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அரசு இணைச் செயலாளரின் கடிதம்!!! PDF CLICK HERE

மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் மாறுதல் ஆணைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

 


மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் மற்றும் மாறுதல் ஆணைகள் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! PDF CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2025

 


திருக்குறள் 

குறள் 115: 

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் 

கோடாமை சான்றோர்க் கணி. 

விளக்கம்

தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.

பழமொழி :

Stay curious,stay learning. 

ஆர்வம் இருந்தால் தான் கற்றல் தொடங்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை . - காமராஜர்

பொது அறிவு : 

01.இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?

ஜெய்சல்மார் - ராஜஸ்தான்

Jaisalmar - Rajasthan

02. பூகம்ப அதிர்வை அளக்க பயன்படும் கருவி எது?

சீஸ்மோகிராப்

Seismograph

English words :

Parchment – a material made from the skin of animals for writing purposes in the past.

Grammar Tips: 

The catch rule

After short vowels, use 'tch'

Ex. Catch

After consonants and long vowels, use ch

Ex. Peach, bench 

அறிவியல் களஞ்சியம் :

 ஒவ்வொரு மனிதருக்கும் தனிப்பட்ட நறுமணம் இருப்பதால், வாசனை சோப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் சோப்புகளின் வாசனையும் அவர்களில் சிலரை மட்டும் கொசு கடிக்க ஒரு காரணமாக அமையலாம் என்று ஐசயன்ஸ் (iScience) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது

ஜூலை 21

21 July 2007 – Pratibha Patil became the first woman President of India.

21 ஜூலை 2007 - திருமதி பிரதீபா பாட்டீல் அவர்கள் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் ஆனார்.

நீதிக்கதை

 அறிவு உயிரைக் காப்பாற்றும்

வீமபுரி என்ற நாட்டை வீரகேசரி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் நீதியும், நேர்மையும் தவறாமல் ஆட்சி செய்து வந்ததால் அவன் நாட்டு மக்கள் பயமும் கவலையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

அந்த அரசன் தன்னாட்டு மக்களின் செயல்களை கண்காணிக்க மாறுவேடம் அணிந்து செல்வது வழக்கம். அவ்வாறு அவன் மாறுவேடம் அணிந்து செல்லும்போது வழியில் உழவன் ஒருவன் வயலில் உழுது கொண்டிருப்பதை பார்த்தான். அவனைக் கண்ட மாறு வேடத்தில் இருந்த அரசன், “எல்லாம் வல்ல இறைவன் உனக்கு நல்ல வலிமையையும், நீண்ட வாழ்நாளையும் வழங்குவானாக” என்று வாழ்த்தினான். 

அதற்கு அந்த உழவன் மாறுவேடத்தில் இருந்த அரசனைப் பார்த்து, “தாங்கள் என்மீது காட்டும் அன்பிர்க்கு மிக்க நன்றி” என்றான். “நிலத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?” என்று மாறுவேடத்தில் இருந்த அரசன் அந்த உழவனிடம் கேட்டான். 

அதற்கு உழவன், “மாதத்திற்கு நூறு வெள்ளி காசுகள் கிடைக்கின்றன” என்று பதில் அளித்தான். “அவ்வளவு தொகையை என்ன செய்கிறாய்?” என்று அரசன் கேட்டான். 

“ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்கு வரியாக செலுத்துகிறேன். இன்னொரு பங்கை நான் பட்ட கடனுக்கு அடைக்கிறேன். மற்றொரு பங்கை கடனாகத் தருகிறேன். நான்காவது பங்கை வீசி எறிகிறேன். இறுதிப் பங்கை எனக்காக செலவு செய்கிறேன்” என்று புதிராகப் பேசினான்.

இதை கேட்ட மாறுவேடத்தில் இருந்த அரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. தன் மாறுவேடத்தை   கலைத்தான். இதுவரை தன்னிடம் பேசியவர் அரசர் தான் என்பதை அறிந்த உழவன் அவரை பணிவுடன் வணங்கினான்.

“நீ சொன்ன பதிலில் வரியாகத் தருவதும், உனக்காக செலவு செய்வதும்தான், எனக்கு புரிந்தது. மற்றவற்றின் அர்த்தம் என்ன?” என்று கேட்டான் அரசன். 

அதற்கு உழவன் அரசே, “என் வருமானத்தில் ஒரு பங்கை என் தாய் தந்தையருக்கு செலவு செய்கிறேன். என்னை வளர்த்து ஆளாக்கிய அவர்களுக்கு செலவு செய்வதை கடனுக்கு அடைக்கிறேன் என்றேன்.

இன்னொரு பங்கை என் மகனுக்கு செலவு செய்கிறேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றப் போகிறவன் அவன். அதனால், அதை கடனாகத் தருகிறேன் என்றேன். 

நான்காவது பங்கை என் மகளுக்கு செலவு செய்கிறேன். எப்படி இருந்தாலும் திருமணம் ஆகி இன்னொருவன் வீட்டில் வாழ வேண்டியவள். அதனால் அந்த செலவை வீணாகத் தெருவில் எறிகிறேன் என்றேன். 

அந்த  உழவனின் பதிலை கேட்டு மகிழ்ந்த அரசன். உன் அறிவுக் கூர்மை மிகவும் நன்றாக உள்ளது. “இந்த விளக்கத்தை நான் இல்லாமல் நீ யாரிடமும் கூறக்கூடாது. அப்படி கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது” என்று சொல்லிவிட்டு சென்றான். 

அரசவைக்கு வந்த அரசன், தான் கேட்ட புதிரை அனைவரிடமும் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டான். ஒருவராலும் அதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இந்த புதிருக்கு யார் விளக்கம் கூறினாலும் அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக வழங்கப்படும், என்று அறிவித்தான் அரசன். 

அரசனுக்கு இந்த புதிரைக் கூறியவர் யார் என்பதை அறிந்து கொண்டான் அமைச்சர்களுள் ஒருவன். அந்த அமைச்சர் நேராக இந்த உழவனிடம் சென்றார்.. 

“அரசு நாணய சாலையில் புத்தம் புதிதாக அச்சடித்த இந்த ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொண்டு அரசரிடம் சொன்ன புதிருக்கான விளக்கத்தை என்னிடம் கூறு” என்றான் அமைச்சர். 

கண்ணை பறிக்கும் ஒளியுடன் கூடிய பொற்காசுகளை கண்ட உழவன் அரசரை எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த புதிருக்கான விளக்கத்தை கூறி பொற்காசுகளைப் பெற்றுக் கொண்டான்.

அரண்மனைக்குத் திரும்பிய அமைச்சர் நேரடியாக அரசிடம் சென்று புதிருக்கான விளக்கத்தை கூறினான். உழவன் தான் பதில் கூறி இருக்கிறான் என்பதை அரசன் அறிந்து கொண்டு, அவனை இழுத்து வருமாறு தன்னுடைய காவலர்களுக்கு ஆணையிட்டான்.

அரசவைக்கு இழுத்து வரப்பட்ட உழவனை பார்த்து, “உனக்கு என்ன துணிச்சல்? நான் இல்லாமல் யாரிடமும் அந்த புதிருக்கான விளக்கத்தை சொல்லக்கூடாது. சொன்னால் உன் உயிர் போய்விடும் என்று உனக்கு நான் கட்டளையிட்டிருந்தேன். என் கட்டளையை மீறி சொல்லி இருக்கிறாய், உன் உயிரை இப்பொழுது யார் காப்பாற்றப் போகிறார் என்று பார்ப்போம்” என்று கோபத்துடன் கேட்டான் அரசன். 

அதற்கு அந்த உழவன் அரசனைப் பார்த்து, “அரசே, நான் சொல்வதைக் கேளுங்கள். என் மீது எந்த தவறும் இல்லை என்று பணிவாக கூறினான்,” உழவன். 

அதற்கு அரசன், “நான் இல்லாமல் யாரிடமும் இந்த புதிருக்கான பதில் சொல்லக்கூடாது என்றேன் அல்லவா?” என்று கத்தினான். 

உடனே அமைச்சர் எடுத்து கொடுத்த பொற்காசுகளை அரசனிடம் காட்டிய உழவன், “இந்த பொற்காசுகளில் ஒரு பக்கத்தில் தங்கள் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்து தான் அமைச்சரிடம் பதில் கூறினேன். 

எனவே தங்களை வைத்துக் கொண்டுதான் நான் விளக்கம் கூறினேன். தங்கள் கட்டளையை நான் எந்த வகையிலும் மீறவில்லை” என்று கூறினான். 

உழவனின் அறிவுக் கூர்மையை  அறிந்த அரசன் அவனுக்கு பரிசுகள் பல தந்து அனுப்பி வைத்தான். உழவனின் உயிரைத் தக்க சமயத்தில் காப்பாற்றியது அவருடைய அறிவுக் கூர்மையே ஆகும்.

இன்றைய செய்திகள் - 21.07.2025

⭐இந்த ஆண்டில் 3-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை:

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

⭐ இந்தியாவில், 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 77 கோடி பேர் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.5 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் அதாவது நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர்.

⭐இந்தியா சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து செயல்படும் RIC அமைப்பை (Russia-India-China Mechanism) உருவாக்க ரஷ்யா முயற்சி எடுத்து உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀உலக கோப்பை மகளிர் செஸ் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹம்பி வெற்றி

🏀Freestyle செஸ் தொடர்: உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி

Today's Headlines

⭐Warning to coastal residents near Mettur dam regarding the dam being filled for the 3rd time this year.

⭐ In India, about 770 million people over the age of 18 are suffering from type 2 diabetes. 25 million people are at risk of developing pre-diabetes.

⭐Russia is trying to create an RIC (Russia-India-China Mechanism) system that will bring together India, China, and Russia.

 SPORTS NEWS 

🏀Indian player Humpy won in the World Cup Women's Chess quarterfinal 

🏀 Freestyle Chess Series: Praggnanandhaa won again, defeating world No. 1 Carlsen.

Covai women ICT_போதிமரம்

ஜுலை 28 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

 

Local%20holiday

ஜுலை 28இல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

மேல்மருவத்தூர் ஆடிப்பூர விழாவையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஜூலை 28 இல் விடுமுறை READ MORE CLICK HERE

ஆடி அமாவாசையன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்களுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர் உத்தரவு,

 

Local%20holiday

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 வியாழக்கிழமை அன்று அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!

 

IMG_20250716_135630

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!

DSE - Incentive Instructions - Download here

கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

 

IMG_20250716_193623

கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

👇👇👇

DSE - Loan & Advances Instructions

Download here

எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. அகவிலைப்படி உயர்வு புதிய உச்சத்தை அடையுது? சம்பள உயர்வு எவ்வளவு? பின்னணி

 


அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, அகவிலைப்படி 4% முதல் 6% வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த உயர்வு ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்தில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (AICPI-IW) மே 2025-இல் 0.5 புள்ளிகள் உயர்ந்து 144 ஆக உள்ளது.

இந்தக் குறியீட்டு எண் மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களில் தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. மார்ச் மாதத்தில் 143 ஆகவும், ஏப்ரலில் 143.5 ஆகவும், மே மாதத்தில் 144 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த நிலையான ஏற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஜூலை 2025 முதல் அகவிலைப்படியில் (DA) 4% முதல் 6% வரை உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55% ஆக இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு எப்போது அறிவிக்கப்படும்? புதிய அகவிலைப்படி ஜூலை 2025 முதல் நடைமுறைக்கு வந்தாலும், வழக்கமாக அரசாங்கம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பண்டிகைக் காலத்தை ஒட்டி அறிவிக்கும். இந்த முறையும் அதே போல் நடக்க வாய்ப்புள்ளது
 
 இந்த அறிவிப்பு தீபாவளியை ஒட்டி வரலாம். இதுகுறித்து தொழிலாளர் பணியகம் மேலும் கூறுகையில், 8-வது ஊதியக் குழுவின் கீழ் ஓய்வூதிய காலம் 12 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு பின்னணி அகவிலைப்படி உயர்வு குறித்த இறுதி முடிவு ஜூன் 2025-க்கான AICPI-IW தரவைப் பொறுத்தே அமையும். இது ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் வெளியிடப்படும். ஜூன் 2025-இல் AICPI-IW குறியீட்டு 0.5 புள்ளிகள் உயர்ந்து 144.5-ஐ எட்டினால், 12 மாத சராசரி AICPI சுமார் 144.17 ஆக அதிகரிக்கும். 7-வது ஊதியக் குழுவின் ஃபார்முலாவின்படி இந்த சராசரியை சரிசெய்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்க்கப்படும் அகவிலைப்படி சுமார் 58.85% ஆக இருக்கும்.
இது தோராயமாக 59% ஆக இருக்கும். இதன் விளைவாக ஜூலை 2025 முதல் 4% அதிகரிப்பு இருக்கும். ஜூன் மாத குறியீட்டில் ஏற்படும் இந்த 0.5 புள்ளி உயர்வு, முன்னர் திட்டமிட்டதை விட சற்று அதிகமான அகவிலைப்படி உயர்வுக்கு வழிவகுக்கும்.
அகவிலைப்படி கடந்த 12 மாதங்களின் சராசரி AICPI-IW தரவைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. இது 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. ஜனவரி முதல் மே வரையிலான புள்ளிவிவரங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் அவை 3% அதிகரிப்புக்கான அடிப்படையாகத் தெரிகிறது. இப்போது ஜூன் மாத புள்ளிவிவரம் இறுதி அகவிலைப்படி உயர்வை தீர்மானிக்கும். அகவிலைப்படி (%) = [(கடந்த 12 மாதங்களின் CPI-IW சராசரி) - 261.42] ÷ 261.42 × 100. இங்கே 261.42 என்பது குறியீட்டின் அடிப்படை மதிப்பு. 7-வது ஊதியக்குழுவின் நிறைவு மற்றும் 8-வது ஊதியக்குழு ஜூலை-டிசம்பர் 2025-க்கான இந்த அகவிலைப்படி உயர்வு 7-வது ஊதியக்குழுவின் கீழ் திட்டமிடப்பட்ட கடைசி உயர்வாக இருக்கும். ஏனெனில் இந்த ஆணையத்தின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. 8-வது ஊதியக்குழு ஜனவரி 2025-இல் அறிவிக்கப்பட்டாலும், அரசாங்கம் இன்னும் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்கவில்லை. அரசாங்கத்தின் விதிமுறைகள் மற்றும் குறிப்புகள் (ToR) ஏப்ரல் மாதத்திற்குள் தயாராகி ஆணையம் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. முந்தைய ஊதியக்குழுக்களின் வரலாற்றைப் பார்த்தால், எந்தவொரு ஆணையத்தின் பரிந்துரைகளையும் செயல்படுத்த 18 முதல் 24 மாதங்கள் ஆகும். எனவே 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2027-க்குள் மட்டுமே செயல்படுத்தப்படும் என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அதாவது, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தற்போதைய அடிப்படை ஊதியத்தில் இன்னும் பல அகவிலைப்படி உயர்வுகளைப் பெறுவார்கள், என்று எதிர்பார்க்கப்படுகிறது.




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.07.2025

 



திருக்குறள் 

குறள் 101: 

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 

வானகமும் ஆற்றல் அரிது.      

 விளக்கம்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

பழமொழி :

Winners never quit, and quitters never win.

 வெற்றி பெறுவோர் ஒரு போதும் கைவிட மாட்டார்கள்.  கைவிடுவோர் வெற்றி பெற மாட்டார்கள். 

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

அன்புள்ள மனிதன் தான் எதிலும் வெற்றியைப் பெறுகின்றான் - ரமணர்

பொது அறிவு : 

01.உலகின் கூரை என்று அழைக்கப்படும் பீடபூமி எது? 

         திபெத் பீடபூமி(Tibetan plateau)

02..தமிழ்நாட்டின் தலைமை தேர்தல்  ஆணையர் யார்?

  திருமதி. அர்ச்சனா பட்நாயக் I.A.S 

Tmt. Archana patnaik, I.A.S

English words :

variants–a slightly different form of a thing. திரிபு வடிவம் அல்லது உருவம்

Grammar Tips: 

Small –not big

Tiny - smaller than small 

Small: A general term for something of limited size

Ex. "She had a small cup of coffee.

"Tiny: Implies a very, very small size.

Ex: "He took a tiny sip of his coffee." 

அறிவியல் களஞ்சியம் :

 மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது. 

ஜூலை 11

உலக மக்கள் தொகை நாள்

உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987 ஆம் ஆண்டில் இதே நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியது.

நீதிக்கதை

 ஒரு ஊரில் ஒரு எலி இருந்தது. ஒருநாள் அதற்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.‌ பசியோட அலைந்த எலி ஓரிடத்தில் ஒரு ஓட்டை தெரிவதை பார்த்தது. அதன் உள்ளே சென்றது. அங்கு பார்த்தால் நிறைய தானியங்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்ட எலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அங்கே இருந்து அந்த தானியங்களை உண்ண ஆரம்பித்தது. அதிக ஆசையால் சோம்பேறித்தனத்தால் அங்கேயே தங்கியிருந்து எல்லா தானியங்களையும் தானே சாப்பிட்டு முடிக்க முடிவு செய்தது.‌ உணவுத் தேடி எங்கும் அலைய வேண்டாம் என்று நினைத்து சந்தோஷப்பட்டது.‌ சில நாட்களுக்குப் பின்பு வெளியில் வந்து வெளி உலகப் பார்க்க நினைத்தது. ஆனால் வேலை செய்யாமல் இருந்து சாப்பிட்டதினால் உடம்பு மிகவும் பெருத்து விட்டது. இப்போது அதனால் அந்த ஓட்டை வழியாக வெளியே வர முடியவில்லை. அங்கேயே முட்டி மோதி இறந்து போனது 

நீதி:  பேராசை பெருநஷ்டம்

இன்றைய செய்திகள் - 11.07.2025

⭐தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது மு.க.ஸ்டாலின்

⭐ கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

⭐டெல்லியில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

⭐எலான் மஸ்க்கின் Starlink செயற்கைகோள்களுக்கு இந்திய விண்வெளி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

⭐டிரம்ப் உத்தரவு எதிரொலி: 2,000 மூத்த அதிகாரிகளை பணிநீக்கம் செய்யும் நாசா

🏀 விளையாட்டுச் செய்திகள்🥳

🏀லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை வீழ்த்திய நிதிஷ் ரெட்டி..!

🏀ஆசிய கோப்பை தகுதிச்சுற்று ரவுண்ட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிராக இந்தியா 0-1 எனத் தோல்வியடைந்தது.

Today's Headlines

✏️ Tamil nadu CM M.K. Stalin noticed our Industry in Tamil Nadu is standing High

✏️ Coimbatore District Collector has advised people to be cautious. Because, Nipah virus has been reported in the state of Kerala. Therefore, the 

✏️ Earthquake in Delhi ,so that the  People in panic 

✏️Indian Space Regulatory Authority approves Elon Musk's Starlink satellites 

✏️Echo of Trump's order: NASA to lay off 2,000 senior officials

 *SPORTS NEWS* 

🏀 Lord's Test: Nitish Reddy bowls out England openers in one over.

🏀 India lost 0-1 to Hong Kong in the Asia Cup qualifiers.

Covai women ICT_போதிமரம்

TNPSC : குரூப் 4 - புதிய பாடத்திட்டத்தில் சாதிப்பது எப்படி?

newproject99copy-1713964573-1717646041
 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய பாடத்திட்டத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும்கூட மதிப்பெண் பகிர்வில் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு இருக்கிறது. இது தேர்வர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்திதான்.

எந்தப் பாடத்தில் இருந்து எத்தனை கேள்விகள் வரும் என்றும், கடினமான சில பாடங்களை ஒதுக்கியும்கூடத் தேர்வர்கள் திட்டமிடலாம். எந்தெந்தப் பகுதிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதைப் புரிந்துகொண்டால் கண்டிப்பாகச் சாதிக்க முடியும்.

திட்டமிடல் அவசியம்: பொது அறிவியல் (5 கேள்விகள்), புவியியல் (5), இந்தியாவின் வரலாறு பண்பாடு - இந்திய தேசிய இயக்கம் (10), இந்திய ஆட்சியியல் (15), இந்தியப் பொருளாதாரம் - தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் (20), தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு - சமூக அரசியல் இயக்கங்கள் (20) என்று பொது அறிவு பாடத்திட்டத்துக்கு மதிப்பெண் பிரிக்கப்பட்டுள்ளது. திறனறிவுப் பகுதிக்கு 15 கேள்விகளும் காரணவியல் பகுதிக்கு 10 கேள்விகளுமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் பல தேர்வர்கள் கடினமாகக் கருதும் பகுதி அறிவியல் பகுதிதான். அறிவியல் பகுதிக்கு 5 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அந்தப் பகுதியை நீங்கள் ஒதுக்கிவிட்டு மற்ற பாடங்களைப் படித்தால்கூடப் போதுமானது.

ஆப்டிடியூட் பகுதியைப் பொறுத்தவரை நீங்கள் எந்த ஒரு பயிற்சியையும் தவிர்க்கக் கூடாது. மிகக் குறைந்த பாடத்திட்டத்தில் 25 கேள்விகள் கேட்கப்படுவதால் இந்தப் பகுதி உங்கள் வெற்றிக்குப் பெரிதும் உதவும்.

தமிழ்த் தகுதி - மதிப்பீட்டுத் தேர்வைப் பொறுத்தவரை கட்டாயப் பாடமாக இருக்கிறது. இலக்கணத்திலிருந்து 25 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இலக்கணம் என்றால் பிரித்து எழுதுதல், சேர்த்து எழுதுதல், குறில் நெடில் வேறுபாடு, இன எழுத்துகள், வினா வகை, ஒருமை பன்மை அறிதல், வேர்ச்சொல் அறிதல், பெயரெச்ச-வினையெச்ச சொற்கள், எதிர்ச்சொல் எழுதுதல் போன்றவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதுபோலத் தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் என்கிற பகுதியிலிருந்து 15 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

வாசித்துப் புரிந்துகொள்ளுதல், கலைச்சொற்கள், எழுதும் திறன் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து 40 வினாக்கள் வருகின்றன. ஒரு பத்தியைக் கொடுத்து அதிலிருந்து கேள்விகள் கேட்கும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் இருந்து தொடங்குகிறது

உங்களுக்குத் தேவையான விடைகள், கொடுக்கப்பட்டுள்ள பத்தியிலே இருக்கும். தேடி எழுத வேண்டியதுதான். மேலும் பல துறைகளைச் சேர்ந்த கலைச் சொற்கள் கொடுக்கப்பட்டு, அவற்றுக்கு நேரான தமிழ்ச் சொற்கள் கேட்கப்படும் பகுதி ஏற்கெனவே இருந்தது. தற்போது அந்தப் பகுதியில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சொல் அகராதி என்கிற பகுதியில் இருந்து 15 கேள்விகள் கேட்கப்படும். அதாவது, ஓரெழுத்து ஒரு மொழி, உரிய பொருளைக் கண்டறிதல், ஒரு பொருள் தரும் பல சொற்கள், கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் போன்றவை. இந்தப் பகுதிகளுள் அனைத்துமே எளிமையானவை. எனவே, எளிதாக மதிப்பெண் எடுக்கலாம்.

- கட்டுரையாளர்: போட்டித்தேர்வுப் பயிற்சியாளர்; suriyadsk@gmail.com

School Morning Prayer Activities - 10.07.2025

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.07.2025

திருக்குறள் 

குறள் 94: 

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் 

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.  

விளக்க உரை: யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

பழமொழி :

kindness costs nothing.  

நற்குணத்திற்கு செலவு கிடையாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

உண்மையான வாழ்க்கை என்பது மற்றவர்களுக்காக வாழ்வதாகும் 

     –புரூஸ்லீ

பொது அறிவு 

01.' தமிழ்நாட்டின் கடல் நுழைவாயில்""  எது?

                 தூத்துக்குடி(Tuticorin)

02. இந்தியாவின் வர்த்தக தலைநகரம் எது?

                   மும்பை (Mumbai)

English words :

enchanted – pleased or very interested,மகிழ்ச்சியுற்ற, கவரப்பட்ட

Grammar Tips: 

Raj's and simran's house 

Joint possession 

When two nouns are closely connected and show joint ownership 

Apostrophe+ s 's is added only to the second noun 

Raj and simran's house

Separate possession 

When two  or more nouns imply separate ownership each noun must take its own apostrophe+s 

Raj's and simran's house 

அறிவியல் களஞ்சியம் :

இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.  

ஜூலை 10

சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பிப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது. முதன் முதல் இந்தியாவில் அச்சகத்தை ஆரம்பித்தவர். முதன் முதல் இந்தியாவில் காகித ஆலையை ஆரம்பித்தவர். முதன் முதல் தமிழ் நாள்காட்டியை அச்சிட்டு வெளியிட்டவர். முதன் முதல் தமிழ் உரைநடையை அறிமுகப்படுத்தியவர். முதன் முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்தவர்.முதன் முதல் ஏழை பிள்ளைகளுக்கு காப்பகத்தை துவங்கியவர். முதன் முதல் பெண்களுக்கு தையல் கூடம் ஆரம்பித்தவர். முதன் முதல் மதிய உணவு வழங்குவதை துவங்கியவர். முதன் முதல் பள்ளி பிள்ளைகளுக்கு பாடநூலை அச்சிட்டவர்.  முதன் முதல் தமிழ் புரோட்டஸ்டன்ட் ஆலயத்தை கட்டினவர். முதன் முதல் பல் சமய உரையாடலை துவங்கினவர்.முதன் முதல் தமிழ் அகராதியை உருவாக்கினவர். முதன் முதல் தென்னிந்திய கடவுள்களின் வரலாற்றை எழுதியவர்.

நீதிக்கதை

 பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.

“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

>

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

இன்றைய செய்திகள் - 10.07.2025

⭐20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

⭐ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு 

முறை நடைமுறைக்கு வரும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி

⭐அடுத்த 5 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூல் குடிநீர் இல்லாத முதல் பெரிய நகரமாக மாறக்கூடும் என மெர்சி கார்ப்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

⭐பி.எட். மாணவர்கள் சேர்க்கை: இணையதள விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

Today's Headlines

✏Tamilnadu Chief Minister M.K. Stalin  has announced 20 lakhs of  students to be provided laptops soon.

✏US President Trump confirms that  announced    New tax system will come into effect from August 1st.

✏Mercy Corps has warned that Kabul, the capital of Afghanistan, could become the first major city to run out of drinking water in the next 5 years. 

✏ B.Ed. Admissions: Deadline for online application registration extended.

 SPORTS NEWS 

🏀The Indian cricket team has gone to England to participate in a 5-match Test series. England won the first Test and India won the second Test. As a result, the series is tied 1-1.

Covai women ICT_போதிமரம்

Loan மூலமாக இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

 

IMG_20250706_194000

கடன் மற்றும் முன்பணம் (Loan & Advances) மூலம் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் கணினி வாங்க விரும்புவோர் விவரம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

DSE - Loan & Advances Instructions Proceedings👇👇👇

Download here

NEW REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE

OLD REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE 

26AS FORM DOWNLOAD FULL VIDEO IN TAMIL-CLICK HERE

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.07.2025

 

திருக்குறள் 

குறள் 86: 

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 

நல்விருந்து வானத் தவர்க்கு.

 விளக்கம் : வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான். READ MORE CLICK HERE

NEW REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE

OLD REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE 

26AS FORM DOWNLOAD FULL VIDEO IN TAMIL-CLICK HERE

மாதம் ரூ.9000 சம்பாதிக்கலாம்! உங்கள் மனைவியுடன் இணைந்து முதலீடு செய்யுங்க

 


வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து வரும் நிலையில், அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) நிலையான வருமானத்தை நாடுபவர்களுக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக மாறியுள்ளது.

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ச்சியான ரெப்போ விகிதக் குறைப்புகளைத் தொடர்ந்து பெரும்பாலான வங்கிகள் தங்கள் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ள நிலையில், அஞ்சல் அலுவலகம் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீட்டு விருப்பமாக உருவெடுத்துள்ளது. இந்த ஆண்டு மட்டும், ரிசர்வ் வங்கி பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் 0.25% குறைப்புகளுடன் ரெப்போ விகிதத்தை 1.00% குறைத்துள்ளது, அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் குறிப்பிடத்தக்க அளவு 0.50% குறைப்பு ஏற்பட்டுள்ளது. READ MORE CLICK HERE

NEW REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE

OLD REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE 

26AS FORM DOWNLOAD FULL VIDEO IN TAMIL-CLICK HERE

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்::

 

வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் என்பது, வருமான வரி செலுத்துவோருக்கான பரபரப்பான மாதமாக இருக்கும். ஏனென்றால், ஜூலை 31ஆம் வருமான வரி தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கடைசி தேதியாக இருக்கும்.

ஆனால் 2024-2025 நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து, கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது வருமான வரித்துறை. READ MORE CLICK HERE

NEW REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE

OLD REGIME E-FILING FULL VIDEO IN TAMIL-CLICK HERE 

26AS FORM DOWNLOAD FULL VIDEO IN TAMIL-CLICK HERE

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு!

 

IMG_20250702_174006

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு!

DSE - HSS HM Rotation List.pdf

👇👇👇👇

Download here

8வது ஊதியக்குழு : அரசு ஊழியர்களுக்கான மதிப்பிடப்பட்ட திருத்தப்பட்ட சம்பளம் மற்றும் படிகள் தோராய கணக்கீடு.

 

8th

8வது ஊதியக்குழு - மதிப்பிடப்பட்ட சம்பள திருத்தம்

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டபடி, 8வது ஊதியக்குழு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை திருத்துவதே இந்த ஆணையத்தின் நோக்கம், இதன் மூலம் 1 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் பயனடைவார்கள். READ MORE CLICK HERE

செப்டம்பர் மாதம் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ?

 

செப்டம்பர் மாதம் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட காலமாக அரசு ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை இதுவாகும். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்த இந்த திட்டம், நிதி நெருக்கடி காரணமாக தொடக்கத்தில் தாமதத்தை சந்தித்தது. பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த இந்த திட்டம் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர் சங்கங்கள் அதிருப்தி அடைந்தன. READ MORE CLICK HERE

School Admission Forms - 2025 (New) - With UDISE No.

 


ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


🔵 PUPS-Form PDF Format Click here

🔵 PUMS -Form PDF Format Click here

🔵 High School-Form PDF Format Click here

🔵 Hr Sec-Form PDF Format Click here

📌 Aided Primary-Form PDF Format Click here

📌 Aided  Middle-Form PDF Format Click here

📌 Aided  HS-Form PDF Format Click here

📌 Aided  HSS-Form PDF Format Click here

🔵 Municipal Primary-Form PDF Format Click here

🔵 Municipal  Middle-Form PDF Format Click here

🔵 Municipal  High School-Form PDF Format Click here

🔵 Municipal  HSS-Form PDF Format Click here

📌 Corporation Primary-Form PDF Format Click here

📌 Corporation Middle-Form PDF Format Click here

G.O.Ms.NO.21 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் சார்ந்து அரசாணை வெளியீடு!

 

IMG_20250529_160955

பொதுப் பணிகள் - 2025-2026 - ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது 28.04.2025 அன்று சட்டமன்றப் பேரவை விதிகளில் , விதி எண் 110 - இன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு - திருமணமான அரசு பெண் பணியாளர்கள் அவர்களது தகுதிகாண் பருவ காலத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக்கொள்ளுதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

G.O.21 DECLARATION OF PROBATION INCLUDED IN MATERNITY LEAVES.pdf

👇👇👇👇

Download here

அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

 

 

IMG_20250529_161928

அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மைச் சான்றிதழ் உள்ளிட்ட பத்து அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

Press Release 1172 - Download here

அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை , பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை 2 ஆண்டுகள் நிருத்தம் ?

 

அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை , பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வை 2 ஆண்டுகள் நிறுத்தி வைக்க வேண்டும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். READ MORE CLICK HERE


தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு.

 

puthiyathalaimurai%2F2025-05-19%2F9f8esg7h%2Fnagai-2
 

தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் நகைக்கடன் வாங்குபவர்களுக்கு மேலும் சில சிரமங்கள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. READ MORE CLICK HERE

Bank Account ( Saving To Salary ) Change Form

1747733083607
 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் வங்கி சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்றுவதற்கான படிவம்.

* Bank Account ( Saving To Salary ) Change Form - Download here

* Covering Letter -  Download here

தகவலுக்காக மட்டும்

ஆசிரியர்கள் தங்களது சம்பளம் பெறும் வங்கியில் உள்ள சேமிப்பு கணக்கினை சம்பள கணக்காக (SAVINGS BANK ACCOUNT TO SALAY ACCOUNT) ஆக மாற்றி கொள்ளவும்.

`தேவையான ஆவணங்கள்`

1. *Aadhaar Card Xerox

2. *Pan card Xerox

3. *Bank Pass Book Xerox

4. *Teachers ID Card xerox

5. *Letter to change Salary Account                    

இந்த ஆவணங்களுடன் தங்கள் வங்கி மேலாளர் அவர்களிடம் கொடுத்து மாற்றி கொள்ள முடியும். 

அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாள் விடுமுறை அறிவிப்பு

 

1360716

கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அங்கன்வாடி, குழந்தைகள் மையங்களுக்கு மே 11 முதல் மே 25 வரை 15 நாட்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. READ MORE CLICK HERE

இடைநிலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் திருத்த மீண்டும் வாய்ப்பு

 

.com/

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. READ MORE CLICK HERE

பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது!

 

1360707

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நாளை (வியாழன்) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. அத்தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைந்தது. READ MORE CLICK HERE

உங்கள் குழந்தைக்கு வங்கிக்கணக்கு உள்ளதா? RBI புதிய விதிகள்... தெரிந்துகொள்ளுங்கள்:

 


18 வயதுக்குட்பட்ட சிறார் அல்லது குழந்தைகளின் வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் இயக்குவதற்குமான வழிகாட்டுதல்களை இந்திய ரிசர்வ் வங்கி திருத்தியுள்ளது. ஜூலை 1, 2025 ஆம் தேதிக்குள் புதிய வழிகாட்டுதல்களின்படி வங்கிகள் தங்கள் தற்போதைய கொள்கைகளைத் திருத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதுவரை, வங்கிகள் தற்போதுள்ள கொள்கைகளைத் தொடரலாம். ஆர்பிஐ அளித்துள்ள புதிய வழ்ழிகாட்டுதல்கள் என்ன? இதில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். READ MORE CLICK HERE

நீட் நுழைவு தேர்வை சுமையாக்கும் மாநில பாடத்திட்டம்; தமிழக மாணவர்கள் திணறல் தவிர்க்கப்படுமா ?

 


நீட் தேர்வுக்கு உட்பட்ட என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் இல்லாத பல பகுதிகள் மாநில பாடத்தித்தில் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) உள்ளதால், தமிழக மாணவர்கள் கூடுதல் பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் எளிமையாக இருக்க வேண்டிய நீட் தேர்வை கடினம் என மாணவர்கள் உணர்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. READ MORE CLICK HERE