குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு நடக்கிறது. 5,529
பதவிக்கு நடத்தப்படும் தேர்வை சுமார் 58 ஆயிரம் பட்டதாரிகள் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி
(நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத
பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான
முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு மே 21ம் தேதி நடத்தியது. இத்தேர்வுக்கு 11
லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சத்து
78,163 பேர் மட்டுமே தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்தனர்.
இருந்தபோதிலும், முதல்நிலை தேர்வை 84.4 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்.
Read More Click here


