2021 மற்றும் 22-ம் ஆண்டுகளுக்கான முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு :

 

887050

தமிழில் சிறந்த மென்பொருள் தயாரிப்புக்கு வழங்கப்படும் முதல்வரின் கணினித் தமிழ் விருதுகளுக்கு டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில், சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிப்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதல்வர் கணினித் தமிழ் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு ரூ.2 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. Read More Click here