திருமலைக்கு செல்லும் ஸ்ரீவாரி பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகள் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை.
சிறப்பு தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை ஒன்று அல்லது இரண்டு
மாதங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இலவச தரிசனத்திற்கு செல்ல ஒரு
நாள் முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும். மேலும் 300 ரூபாய் தரிசன
டிக்கெட் இல்லாதவர்கள் ரொம்பவே கஷ்டப்படுவார்கள். அப்படி கஷ்டப்படாமல்
மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்காமல் எளிமையாக தரிசனம் செய்ய என்ன
செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.


