செல்போனை அதிகநேரம் பயன்படுத்தியதால் படுத்த படுக்கையாக கிடக்கும் இளம்பெண்: 'வெர்டிகோ' என்ற நோயால் கடும் பாதிப்பு

 

இங்கிலாந்தில் செல்போனை அதிக நேரம் பயன்படுத்திய இளம்பெண் ஃபெனெல்லாவுக்கு 'வெர்டிகோ' என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் படுத்த படுக்கையாக கிடக்கிறார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த ஃபெனெல்லா (29) என்ற பெண் ஒவ்வொரு நாளும் செல்போன் அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருப்பார். செல்போனில் ஒரு நாளைக்கு 14 மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்ட அவர், தற்போது 'வெர்டிகோ' என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு நவம்பரில் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. தலை மற்றும் கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது நிற்க முடியாமல் தவித்து வந்தார். அதனால் வேறுவழியின்றி படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். Read More Click Here