விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்: அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற எந்த தடையுமில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்காததால் கடன் பெற முடியவில்லை என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த ஆட்சியில் 16 லட்சம் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்றும், அதில் 12 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே, விவசாயிகள் கடன் பெற எந்த தடையுமில்லை எனக் கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, விவசாயிகளுக்கு தொடர்ச்சியாக கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், விவசாயிகள் யார் வேண்டுமானாலும் கடன் பெற்றுக்கொள்ளலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளார் .