இனியும் ஏன் TET கவலை
அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC)தேர்வெழுதி வெற்றி பெற்று இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேரத்தான் அத்தனை கடும் முயற்சிகள் எடுக்க வேண்டும்.இதற்காக ஒன்று ரெண்டல்ல பத்தாண்டுகள் பயிற்சி மையங்களில் தவம் கிடந்தவர்களும் உண்டு. அதற்கு பின்னர், பதவி உயர்வுகளுக்கு பணியில் சேர்ந்த சம்பந்தப்பட்ட துறைத் தேர்வுகள் எழுதினால் மட்டும் போதும்.வருவாய்த்துறையை பொறுத்தவரை பல பதவிகளை கடந்து மாவட்ட வருவாய் அதிகாரி வரை வர வாய்ப்பு உள்ளது.
