மதிப்பெண் அடிப்படயில் முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவி காயத்ரியை கட்டணம் இல்லாமல் பயில கல்லூரிகள் பல அழைப்பு விடுக்கின்றன.
பிளஸ் 2 தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் 86.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. பெரம்பூரில் உள்ள எம்.எச் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்த மாணவி காயத்ரி 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். கணக்கியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மற்றும் தமிழ், பொருளாதாரம், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில் தலா 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
Read More Click Here