தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது ஜூலை 31ம் தேதிக்கு பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் கல்லூரிகளில் இப்போதே
மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் தனியார்
பள்ளிகளும் ஜூலை 31-ம் தேதிக்கு பிறகுதான் மாணவர் சேர்க்கை துவங்க வேண்டும்
என்றும் முதல் தலைமுறை பட்டதாரிகள் சலுகையை மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து
வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டம்
சிபிஎஸ்இ பிரிவு மாணவர்கள் மதிப்பெண் விவரங்கள் வந்த பிறகுதான் மாணவர்
சேர்க்கையை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.