தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களே மற்றும் ஆசிரியர் பெருமக்களே இந்த பதிவு உங்களுக்கானது.அனைவரும் அறியும்படி Share செய்யுங்கள் :

இந்திய தேர்தல் ஆணையம் உச்ச கட்ட அதிகாரம் பொருந்திய தன்னாட்சி பெற்ற மாபெறும் அமைப்பாகும். எவ்வித இந்திய சட்ட விதிகள் இவ்வமைப்பை கட்டுபடுத்த முடியாத அளவிற்கு மிகுந்த அதிகாரம் வாய்ந்தது.

இப்பேர்பட்ட இந்திய தேர்தல் ஆணையம்  தன் ஆட்சி அதிகாரங்களில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித மாற்றமும் இன்றி மாநில தேர்தல் பணிகளை  இன்று வரை செவ்வனே செய்து வருகின்றது.

 அனைத்து பாடங்களுக்கும் PG TRB STUDY MATERIALS&MODEL QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.


 அதே வேளையில் ஒரு மாநிலத்தில் தேர்தலை நடத்தும் பொறுப்பை தேர்தல் ஆணையம் எடுக்கும் பொழுது தேர்தல் பணிகளை மத்திய மற்றும் மாவட்ட அரசு பணியாளர்களை வைத்து தேர்தல் பணிகளை வழங்கி தேர்தல் நடத்தி வருகின்றது என்பது நாம் அறிந்ததே.

 அதேவேளையில் இக்காலத்தில்  50 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு உடல் உபாதைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளும்ஊழியர்களை தேர்தல் பணியில்  ஈடூபடுத்துவதால் பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக பெண் ஊழியர்கள் தேர்தல் பணி நேரங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஊட்படுகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் இருப்பிட முகவரியை வைத்து சொந்தத் தொகுதியில் தேர்தல் பணி வழங்கப்பட வேண்டும் மேலும் தேர்தல் பணி முடிந்தவுடன் இரவு நேரங்களில் அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்புவது இந்திய தேர்தல் ஆணையத்தின்  ஆணையத்தின் மிக முக்கிய பணியாகும் . மேலும் இந்திய தேர்தல் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காப்பீடு வசதிகளையும் செய்யப்பட வேண்டும். தேர்தல் பணி முடித்து வீடு திரும்பும் வரை அவர்களது உயிர் மற்றும் விபத்துகளுக்கு உரிய நிவாரண தொகை அளிக்க வேண்டும்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளும் ஒரே இடத்தில் பெற இங்கு கிளிக் செய்யவும்.

 த தேர்தல் நாளன்று ஒரு அரசு ஊழியர் தொடர்ந்து பத்து மணி நேரத்திற்கு மேலாக எவ்வித ஓய்வும் வழங்காமல் தொடர்ச்சியாக  தேர்தல் பணியில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரியது. நவீன காலத்தில் பழைய விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும். எந்த ஓர் அரசியல் கட்சிகள் நிச்சயமாக இதை பற்றி கவலை கொள்ளாது.

இதனால் நோய் உபாதைகளால் பாதிப்புக்கு உள்ளான அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் மருத்துவ சான்றிதழ் விலக்கு கோருகிறார்கள். ஆனால் அவர்களை வலுக்கட்டாயமாக தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. கட்டாய ஓய்வு கொடுக்க பரிந்துரை செய்யவும் கூடாது. இது முற்றிலும் மனித உரிமை மீறல்கள்.

மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்டது தான் நமது இந்திய ஜனநாயகம் .
இவ்வகையில் உடல்நிலை சரியில்லாத மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் 50 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களை வலுக்கட்டாயமாக தேர்தல் பணிக்கு  ஈடுபடுத்துவது சட்ட விரோதமாகும்.  

இந்திய தேர்தல் பணி என்பது மிக முக்கிய பணியாகும். அதே நேரத்தில் ஒரு வாக்குச்சாவடியில் பணியமர்த்தப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக எவ்வித ஓய்வு இல்லாமல் மற்றும் பதிலி பணியாளர்கள் இல்லாமல் இயற்கை உபாதை கூட கழிக்காமல் பணி செய்வது என்பது இக்காலகட்டத்தில் மிகுந்த சிரமத்திற்கு உரியது.
ஒரு தொகுதியில் பணி அமர்த்தப்படும் ஒவ்வொரு பூத் வாக்குச்சாவடி அலுவலர்கள் அவர்களுக்கு கூடுதலாக  ஒரு ரிசர்வ் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட வேண்டும் .

ஆனால் இது காலம் வரை ஒரு தொகுதியில் தேர்தலுக்காக நியமிக்கப்படும் வாக்குச்சாவடி அலுவலர்களை தவிர ரிசர்வ் செய்யப்படும் அலுவலர்கள் ஒரே இடத்தில் ஒட்டுமொத்தமாக அமர வைக்கப்படுவது வேதனைக்குரியது. இம்முறை மாற்றப்பட வேண்டும். ஒரு வாக்குச்சாவடியில் பணியமர்த்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அவர்கள் உணவுக்காகவும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு செல்வதற்கும் மாற்றாக இந்த ரிசர்வ் பணியாளர்கள் பயன்படுத்தபட வேண்டும் என்பது தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

 இதனை இந்திய தேர்தல் ஆணையம் இனிவரும் காலங்களில் இதனை கருத்தில் கொண்டு மிகச் சிறப்பாக இப்பணியினை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் தேர்தல் ஆணையம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பாக இருப்பதால் சட்ட விதிகளில் சில திருத்தங்கள் செய்து இன்றைய காலத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றது.
 

மாநில தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தேர்தல் பணியினை மேலும் சிறப்பாக நடத்த கல்லூரியில் இறுதியாண்டு வகுப்பு படிக்கும் மாணவர்களை பயன்படுத்த சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
 
அத்தகைய சட்டங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் பொறியியல் பட்டதாரி மாணவர்கள் இன்னும் எத்தனையோ என  வளமிக்க human resource மாணவர்களை இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு அலுவலர்கள் ஆக பயன்படுத்தி அவர்கள்  நியமிக்கப்பட செய்ய வேண்டும்.
 
இதனால் நம்முடைய மனித வளம் இன்னும் சிறப்பாக மேம்பாடடையும்.
சம்பந்தப்பட்ட இந்திய
சட்ட அலுவலர்கள் இதற்கான முயற்சியை கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

 இந்திய ஜனநாயக தேர்தலில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும் இதற்கான சட்ட வழிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்தப்பட வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தேர்தலை வெறும் சடங்காக இல்லாமல் இனி வரும் காலங்களில் நவீன தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் அவர்களில் குறிப்பாக 50 வயதிற்குட்பட்ட நபர்களை அரசு தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தாமல் விலக்கு அளித்தும்
வழிவகை செய்யப்பட வேண்டும். இதனை  சட்டரீதியாக அரசாணைகள் இயற்றி அதனை செயற்படுத்த வேண்டும்.

அன்புடன்

 இந்திய குடிமகன்களில் ஒருவர்

தியாகி.திருவேங்கடம்.

ஜெய் ஹிந்த்

வந்தேமாதரம்.