மிரட்டும் கொரோனா.. மார்ச் 31 வரை பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் உத்தரவு !! எங்க வாங்க பார்க்கலாம்:

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கடுமையான போராட்டம் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டது. எனினும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், பஞ்சாபில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இதனால் நாளை முதல் 2 வாரங்களுக்கு அம்மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். மருத்துவ கல்லூரிகளை தவிர அனைத்து கல்வி நிலையங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மால்களில் 100 பேருக்கு மேல் எப்போதும் இருக்கக் கூடாது, சினிமா தியேட்டர்களில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கொரோனா அதிகம் பாதித்த 11 மாவட்டங்களில் எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி கிடையாது, இறுதி சடங்குகள், திருமணங்களுக்கு 20 பேருக்கு மட்டுமே அனுமதி போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் பஞ்சாபில் அமலுக்கு வருகிறது என முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு இதை கடைப்பிடித்து கொரோனா பரவும் சங்கிலியை உடைக்க வேண்டும் என மக்களை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.