வருமானவரிக் கணக்கில் உங்கள் கடவுச்சொல்லை ( password) மாற்றம் செய்ய Income tax returns refilling சில யோசனைகள்:

 

வருமானவரிக் கணக்கில் உங்கள் கடவுச்சொல்லை ( password) மாற்றம் செய்ய
Income tax returns refilling சில யோசனைகள்:

மார்ச் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பெறும் சம்பளத்தை கணக்கிட்டு  அதற்குரிய வருமான வரியை

அட்வான்ஸ் வரியாக ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை பிடித்தம் செய்யப்படுகிறது.

பிடித்தம் செய்யப்படும் தொகை quarter file DDO அவர்களால் செய்யப்படுவதன் மூலம் தொகை அவரவர் Pan numberல் வரவு வைக்கப்படுகிறது.

அவ்வாறு வரவு வைக்கபட்ட உடன் நான் e-filling மூலம் income tax return செய்யலாம். E-filling செய்ய கடைசித் தேதி தான் 31, ஜீலை.

Income returns file செய்யும் போது தான் வருமான வரித்துறைக்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.

பிப்ரவரி மாதம் நாம் தயார் செய்வது வருமான வரி கணக்கிட்டுத்தாள் தான். அது வருமான வரி அலுவலகத்திற்கு செல்வதில்லை.

குறிப்பு: income tax return e-filling நாமே செய்யலாம். ஆனால் பெரும்பாலானவர்கள் ரூ 300 முதல் 500 வரை ஆடிட்டரிடம் கொடுத்து பைல் செய்கிறார்கள். அவர்கள்
user name : Pan number
Password: அவர்களாக கொடுத்துக் கொள்கிறார்கள்.( நமது பெயரில் அவர்கள் நமது கணக்கை நிர்வகிக்கின்றனர்).
மேலும் உங்கள் செல் நெம்பருக்கு பதிலாக அவர்கள் செல் நெம்பர் கொடுப்பார்கள்.


இதனால் தான்
1.மூன்று மாதத்திற்கு ஒரு முறை quarter file செய்யும் போது அந்தத் தொகை உங்களுக்கு குறுஞ்செய்தியாக வருவதில்லை.

2. உங்கள் வருமான வரி கணக்கு சம்பந்தமாக வருமான வரித்துறை அனுப்பும் எந்த செய்தி உங்களுக்கு வருவதில்லை.

3. ரிட்டன் தொகை உங்கள் வங்கி கணக்கில் வரவு செய்யப்பட்டது என்ற குறுஞ்செய்தி வருமான வரித்துறை அனுப்பும். அதுவும் உங்களுக்கு வருவதில்லை.

4. உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தான் நிர்வகிக்க வேண்டும். பிறர் நிர்வகிக்கக் கூடாது. அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டாலே பிறர் தவறாக பயன்படுத்தினாலோ அதற்கு நீங்களே பொறுப்பு.

ஆகையால் உங்கள் வருமான வரி கணக்கு நீங்களே நிர்வக்கிக் password மாற்றம் செய்யுங்கள். அதன்பின் உங்கள் கணக்கை வேறு யாரும் password தெரியாமல் பார்க்க முடியாது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உதவிக்கு
உதுமான் அலி கா
மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
திருச்சி மாவட்டம்
வாட்ஸ் ஆப் 9790328342