தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு – அரசு புதிய திட்டம்!!

கொரோனா நோயாளிகளை பள்ளியில் வைத்து சிகிச்சை அளிக்க விரைவில் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவு :

தமிழகம் முழுவதும் விரைவில் பள்ளிகள் திறப்பு – அரசு புதிய திட்டம்!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தினால் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை விரைவில் திறந்து கொரோனா வார்டாக மாற்ற உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் பள்ளிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தினசரி அதிகப்படியான உச்சம் பெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 31,800 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 288 பேர் உயிர் இறந்துள்ளனர். தினசரி எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து வருவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

ஏற்கனவே கொரோனா பரவலின் தொடக்கத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கும் தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதனால் கொரோனா தீவிரம் காரணமாக சிகிச்சை அளிக்கும் முகாம்களை ஏற்படுத்த பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. முதலில் சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அங்குள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் போன்றவற்றை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட உள்ளது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அதிக அளவிலான வகுப்பறைகள் இருக்கும். அதனால் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்தால் பெரிதும் உதவியாக இருக்கும் என தமிழக அரசு கருதுகிறது. எனவே அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.