உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து-G. O. Ms. No. 37 P & AR dept FR -IV date:10.03.2020 யில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான மாவட்ட ஆட்சியரின் தெளிவுரை :

சார் நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வுக்கான ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் கல்வித் தகுதிக்கான ஊதிய உயர்வு ரத்து செய்வது குறித்த அரசாணை G. O. Ms. No. 37 P & AR dept FR -IV date:10.03.2020 யில் பலருக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  

மாவட்ட ஆட்சியரின் தெளிவுரைக்கு இங்கு கிளிக் செய்யவும் .


இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தர் போன்றோர் பட்டதாரிகளாக  இருந்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த advance increment (higher start of pay) 01.04.2013 முதல் G. O. Ms. No. 241 finance (PC) dept date :22.07.2013 ன் படி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதனை மீண்டும் பெறலாம் என எங்கேயும் குறிப்பிட வில்லை.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும் :
ஆனால் இன்னும் பல துறைகளில் குறிப்பிட்ட பதவிகளுக்கு குறிப்பிடட்ட படிப்புகள்(special course) படித்தவர்களுக்கு முன் ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறை இருந்து வருகிறது.  (Example -judicial officer M.L increment)

இந்த குறிப்பிட்ட துறைகளின் குறிப்பிட்ட படிப்புகளுக்கான முன் ஊதிய உயர்வும், account test க் கான முன் ஊதிய உயர்வும்தான் தற்பொழுது  10.03.2020 முதல் ரத்து செய்யப்பட்டு 10.3.2020 க்கு முன்பு இதற்கான தகுதிகளோடு இருந்து வாங்காமல் விடுபட்டவர்களுக்கு P&AR dept ன் ஓப்புதல் பெற்று முன் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே 01.04.2013 முதல் ரத்து செய்யப்பட்ட பட்டதாரி   இளநிலை உதவியாளர், தட்டச்சர்,  பதிவறை எழுத்தர் போன்றோருக்கு முன் ஊதிய உயர்வு கிடையவே கிடையாது. 

அனைத்து பாடங்களுக்கும் PG TRB STUDY MATERIALS&MODEL QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.  

மேற்கண்ட கூற்றுகளை  அரசாணையின்படி கூறியுள்ளோம். ஆனால் கீழ்கண்ட கூற்றுகளை தர்க்க ரீதியாக கூற விரும்புகிறோம்.

தற்போதைய அரசின் நிதிச்சுமை காரணமாகத்தான் முன் ஊதிய உயர்வு ரத்து, DA நிறுத்தம், Surrender நிறுத்தம், ஓய்வூதிய வயது உயர்வு போன்றவை செய்யப்பட்டுள்ளன.   
அரசாங்கம் நிதியில் இத்தனை கட்டுப்பாடுகளோடு இருக்கும்போது 2013க்கு பின்பு 7 வருடங்களில் பணியில் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பட்டதாரி  இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தர் ஆகியோர்க்கு முன் ஊதிய உயர்வு தருகிறோம் என அரசாங்கம் சொல்லுமா?

ஆனால் ஒரு சில துறைகளில் அரசாணையை சரியாக புரிந்து கொள்ளாமல்  பட்டதாரி இளநிலை உதவியாளர், தடடச்சர், பதிவறை எழுத்தர் போன்றோருக்கு முன் ஊதிய உயர்வு உண்டு எனக் கருதி கொண்டு விபரங்களைக் கோரி கடிதம் அனுப்புகிறார்கள்.

மேற்படி பிற துறைகளின்  கடிதங்கள் பிறருக்கு தெரிய வரும்போது தமது துறையில் இது குறித்து செய்யவில்லை என நினைத்துக் கொள்ளுகிறார்கள்.

01.04.2013 உடன் ரத்து செய்யப்பட்ட பட்டதாரி இளநிலை உதவியாளர், typist,  Record clerk(10 th) ஆகியோர்க்கு முன் ஊதிய உயர்வு கிடையவே கிடையாது.  Account test க்கு மட்டுமே 10.3.2020 க்கு முன்பு pass செய்தவர்களுக்கு increment உண்டு.