நீங்கள் புதிய தம்பதி என்றால் புதிய ரேஷன் கார்டு வாங்க, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி உள்ளிட்ட விபரங்களை அதிகாரிகள் உறுதி செய்து 30 நாட்களில் ரேஷன் கார்டு தருவார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 40000 பேர் விண்ணப்பித்து வருகிறார்கள்.
புதிய ரேஷன் அட்டை கேட்டு www.tnpds.gov.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு முன்பு ரேஷன் கார்டுகள்
குறித்து சில விஷயங்களை பார்ப்போம். ரேஷன் கார்டில் மொத்தம் 5 வகைகள்
உள்ளன. இதில் PHH ரேஷன் கார்டுக்கு அரிசி உட்பட அனைத்து பொருட்களும்
தருகிறர்கள். PHH - AAY கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப்
பொருட்களும் தரப்படுகிறது.
Read More Click here